இந்திய ஹெலிகாப்டர் மீது ஏவுகணைத் தாக்குதல்?- சர்ச்சையில் விமானப் படை அதிகாரி | air force officer set to face criminal case for missile that downed Mi-17 chopper

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (21/05/2019)

இந்திய ஹெலிகாப்டர் மீது ஏவுகணைத் தாக்குதல்?- சர்ச்சையில் விமானப் படை அதிகாரி

டந்த பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை விமானங்களும் பாகிஸ்தான் போர் விமானங்களும் டாக் ஃபைட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, காஷ்மீரின் நவ்ஷோரா பகுதியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த  எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த, 7 பேருமே பலியானார்கள். விபத்து குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து தரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மூலமாகத் தவறுதலாக இந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானப்படை தளத்தின் Air Officer Commanding உத்தரவின் பேரில் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமானப்படை தளத்தைச் சேர்ந்த Air Officer Commanding பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஹெலிகாப்டர்

பாதுகாப்புத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், `` இதுபோன்ற மனிதத் தவறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு அதிகாரி கூறுகையில், `` இதே பகுதியில் இந்திய- பாகிஸ்தான் போர் விமானங்கள் டாக் ஃபைட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ஹெலிகாப்டரை விமானப்படை தளத்துக்கு மீண்டும் திரும்ப அழைத்துள்ளனர். இது தவறானது. சண்டை நடக்கும் இடத்திலிருந்து ஹெலிகாப்டரை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் '' என்று  தெரிவித்துள்ளார். இப்படி, பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது 

விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட 10 நிமிடத்தில் பட்கன் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்தது. இங்கேயிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய - பாக். போர் விமானங்கள் டாக் ஃபைட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது, இஸ்ரேலிய தயாரிப்பான ஸ்பைடர் ரக  ஏவுகணை இந்த ஹெலிகாப்டைரை தாக்கியுள்ளது. ஏவுகணை ஏவப்பட்ட புகாரில் 4 பேர் வரை சிக்கியுள்ளனர். குற்றம் உறுதி செய்யப்பட்டால் பதவி இழப்பதோடு சிறையில் அடைக்கப்படவும் சட்டத்தில் இடம் உள்ளது. 

இறுதி அறிக்கை அளிக்கப்படவில்லை. விமானப்படை செய்தி தொடர்பாளர் இதை மறுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க