எந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு?#VikatanInfoGraphics | How many percent of the votes are voted on?

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (22/05/2019)

கடைசி தொடர்பு:20:49 (23/05/2019)

எந்தெந்த நாடுகளில் எவ்வளவு சதவிகிதம் வாக்குப்பதிவு?#VikatanInfoGraphics

உலகளவில் சோமாலியா நாட்டில்தான் மிக அதிகளவு வாக்குகள் பதிவாகின்றன. இங்கு 99.86 சதவிகித வாக்குகள் பதிவாகின்றன.

வாக்குப்பதிவு

க்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. நாடு முழுவதும் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து எட்டரை மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பி.ஜே.பி. கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருப்பதால், அதுபற்றிய எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள சூழலில் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதில் ஒட்டுமொத்த மக்களும் ஆவலுடன் உள்ளனர். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிடத் தேர்தல் ஆணையத்தின் 88 அதிகாரிகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

இந்தத் தேர்தலில் 67.1 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில்தான் மிக அதிகபட்ச வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு

உலகளவில் சோமாலியா நாட்டில்தான் மிக அதிகளவு வாக்குகள் பதிவாகின. இங்கு 99.86 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதற்கு அடுத்தபடியாக வியட்நாமில் 99.26 சதவிகித வாக்குகள் பதிவாகின. லாவோஸ், சிங்கப்பூர், எத்தியோப்பியா, ருவாண்டா, மால்டா, துர்க்மெனிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகிய நாடுகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு

அதேபோல், உலகிலேயே மிகக்குறைந்த அளவு வாக்குகள் பதிவாகும் நாடாக ஹைதி உள்ளது. இங்கு 17.82 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகின. குடிதண்ணீர், உணவு இல்லாமல் வறுமையின் உச்சத்தில் இருக்கும் நாடு ஹைதி என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து, மைக்குரேனேசியா, ஜோர்டான் போன்ற நாடுகளிலும் மிகவும் குறைவான அளவே வாக்குகள் பதிவாகின. உலக அளவில் சில முக்கியமான நாடுகளை எடுத்துக்கொண்டால், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் வரை வாக்குகள் பதிவாகின.

நீங்க எப்படி பீல் பண்றீங்க