இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்? | Sony planning to stop mobile business in India

வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (22/05/2019)

கடைசி தொடர்பு:21:28 (22/05/2019)

இந்தியாவிலிருந்து வெளியேற முடிவு செய்த சோனி... என்ன காரணம்?

சோனி

உலகின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்றான சோனி இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை விற்பனையில் கொடிகட்டிப் பறந்தது சோனி. பின்னர் போட்டி அதிகரித்ததால் சற்று பின் வாங்கியது. தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மொபைல் விற்பனையால் லாபமும் குறைந்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா உட்பட சில சந்தைகளில் இருந்து சோனி வெளியேறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு டோக்கியோவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கே விவாதிக்கப்பட்ட சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் மொபைல் விற்பனையில் கவனம் செலுத்துவதைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொபைல்

அதே வேளையில் ஜப்பான், ஐரோப்பா, தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியச் சந்தைகளில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக நிலவுகிறது, அவர்களுடன் போட்டி போடும் வகையில் விலை கொண்ட ஸ்மார்ட்போன்களை சோனி மற்றும் பல முன்னணி நிறுவனங்களால் வெளியிட முடியவில்லை. மேலும், அண்மைக்காலமாகச் செலவைக் குறைக்க சோனி எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது.