ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் வெற்றி! பிராந்திய மொழிகளில் வாழ்த்துச் சொன்ன மோடி | PM Modi congratulates Jegan and Naveen for their victory in the respective states

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:45 (23/05/2019)

ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் வெற்றி! பிராந்திய மொழிகளில் வாழ்த்துச் சொன்ன மோடி

ஆந்திர மாநிலத்தில் மகத்தான வெற்றிபெற்றுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா  மாநிலத்தில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள நவீன் பட்நாயக் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் அனைத்து 25 தொகுதிகளிலும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. மேலும், சட்டசபையிலும் மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இடங்களைப் பிடித்து, அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார்.

மோடி வாழ்த்து

இந்த வெற்றிக்காக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளதற்காக தமது வாழ்த்துகள் என்றும், வெற்றிகரமாக மாநிலத்தில் ஆட்சியைத் தொடர வாழ்த்துகள் என்றும் அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஒடிசா மாநிலத்தில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள மோடி, அடுத்த ஆட்சியை சிறப்பான முறையில் தொடர தன்னுடைய வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க