`பணம் வாங்கி விட்டார்கள்; தவறானது என்றார்கள்!' - தேர்தல் கணிப்பை உண்மையாக்கியவர் கண்ணீர் | Axis My India chief, t Pradeep Gupta who got election results 100% right, breaks down on live show

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:47 (23/05/2019)

`பணம் வாங்கி விட்டார்கள்; தவறானது என்றார்கள்!' - தேர்தல் கணிப்பை உண்மையாக்கியவர் கண்ணீர்

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று அனைத்து ஊடகங்களுமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறியிருந்தன. அதில், இந்தியாடுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் கணிப்பு துல்லியமாக அமைந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிறுவனம் 339 முதல் 365 இடங்கள் வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைக்கும் என்று கணித்திருந்தது. ஆனால் இத்தகைய இமாலய வெற்றி சாத்தியமில்லையே என்று கருதப்பட்டது.

கருத்துக்கணிப்பு

பிற கணிப்புகளைக் காட்டிலும் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் கணிப்பு கிட்டத்தட்டத் துல்லியமாக அமைந்திருந்தது.  பா.ஜ.க கூட்டணி 339 இடங்கள் வரை பெற்றுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கூட்டணிக்கு 77 முதல் 108 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்திருந்தது. காங்கிரஸ் கட்சி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

தங்கள் கணிப்பு  உண்மையானதில் அலாதி மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதீப் குப்தா.. இந்தியா டுடேவின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மகிழ்ச்சி தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, அவர் கூறுகையில்,  ``தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எப்படி இமாலய வெற்றி கிடைத்துள்ளதோ, அதே போலவே நாங்களும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு  கணிப்பு வெளியிட்டுள்ளனர். உண்மையான கணிப்பு அல்ல. தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமையும் என்றெல்லாம் எங்களைக் குற்றம் சாட்டினார்கள்'' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,  `` கடந்த 40 நாள்களாக எங்கள் டீம் கடுமையாக உழைத்தது. சரியான கேள்விகளை முன் வைத்ததுதான் எங்கள் கணிப்பின் வெற்றிக்கு முக்கிய காரணம் . என் பலமே 500-க்கும் மேற்பட்ட நம்பிக்கை மிகுந்த நேர்மையான ஃபீல்டில் பணியாற்றுபவர்கள்தான்''  என்றார். 

ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் 2013 முதல் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள், பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களில் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 34  கருத்துக்கணிப்புகள் சரியாக அமைந்துள்ளன. துல்லியம் 95 சதவிகிதம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க