`மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடின உழைப்பை அளிப்போம்!' - மோடி | Salute to every BJP party men and hard work to fulfil people's aspirations in India - Modi

வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (23/05/2019)

கடைசி தொடர்பு:19:42 (23/05/2019)

`மக்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடின உழைப்பை அளிப்போம்!' - மோடி

`பி.ஜே.பி. அரசின் வளர்ச்சித் திட்டங்களை வீடுகள்தோறும் சென்று விளக்கமாக எடுத்துரைத்து, வெற்றிக்குப் பாடுபட்ட கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் என் வணக்கங்கள்' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், வெற்றிக்காக உழைத்த பி.ஜே.பி. தொண்டர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்திய மக்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மோடி தமது ட்விட்டரில், ``நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் அதிகளவு கடின உழைப்பைத் தருவதற்கான வலிமையை இந்த வெற்றி தந்துள்ளது'' என்று கூறியுள்ளார். மேலும், பி.ஜே.பி கூட்டணி மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார். பி.ஜே.பி. தொண்டர்களின் உறுதிப்பாடு, விடா முயற்சி, மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் வீடு வீடாகச் சென்று சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தமது ட்விட்டரில் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க