`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்! | Parents in UP name kid born on May 23 Narendra Modi,

வெளியிடப்பட்ட நேரம்: 21:27 (25/05/2019)

கடைசி தொடர்பு:21:27 (25/05/2019)

`மோடி ஜியை போல நல்ல மகனாக வளர்ப்பேன்' - தன் குழந்தைக்கு பிரதமர் பெயர் வைத்த தம்பதியினர்!

மே23-ம் தேதி பிறந்த குழந்தைக்கு, பிரதமர் நரேந்திர மோடி என்று வடமாநிலத்தில் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி நாடுமுழுவதும் வெளியாகின. இதில் ஆளும் பா.ஜ.க வரலாறு காணாத அளவில் வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் கூட்டணிக்கட்சிகளுடன் 348 தொகுதிகளிலும், பா.ஜ.க மட்டும் 303 இடங்களிலும் சாதனை படைத்துள்ளது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரியுள்ளார் நரேந்திர மோடி. இந்நிலையில்  உத்தரபிரதேசம் மாநிலம் கொண்டா பகுதியில் மே 23 -ம் தேதி அன்று மேனாஜ் பேகம் என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. மேனாஜ் பேகத்தின் கணவர் துபாயில் வேலை செய்துவருகிறார்.  தன் கணவனுக்கு போன் செய்து குழந்தை பிறந்துள்ள நல்ல செய்தியை கூறியுள்ளார் பேகம். உடனே அவரது கணவர், `மோடி அங்கு வெற்றி பெற்று விட்டாரா?’ என்று கேட்டுள்ளார். பதிலுக்கு பேகம், `ஆம் நரேந்திர மோடி இங்கே வெற்றி பெற்றுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

மோடி என பெயரிடப்பட்ட குழந்தை

 

உடனே அவர்கள் இருவரும் சேர்ந்து கதன் குழந்தைக்கு, `நரேந்திர மோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பாக பேகம், ``என் குழந்தை மே23-ம் தேதி அன்று பிறந்தது. இந்த தகவலை துபாயில் இருக்கும் என் கணவரிடம் தொலைபேசி மூலம் கூறினேன். இதையடுத்து நாங்கள் குழந்தைக்கு மோடி என பெயர் வைக்க முடிவு செய்தோம். நான் என் குழந்தையை, மோடி ஜி போல நல்ல குழந்தையாக வளர்க்க முடிவு செய்துள்ளேன். மேலும் மோடியைப்போல வெற்றியுள்ள மகனாக வளர்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.