அதிநவீன போர் விமானத்தின் முதல் பெண் விமானி பி- சாதித்த மோகனா சிங்! | Mohana Singh became the first IAF woman pilot

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (31/05/2019)

கடைசி தொடர்பு:22:20 (31/05/2019)

அதிநவீன போர் விமானத்தின் முதல் பெண் விமானி பி- சாதித்த மோகனா சிங்!

ந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானியாக மோகனா சிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

விமானி

இந்திய இராணுவத்தில் உள்ள விமானப் படையில் பெண்களைப் பணியமர்த்த, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்தது. இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டில் இந்திய விமானப் படையில் பவானா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்கள் அதிகாரிகளாகப் பணியமர்த்தப்பட்டார்கள். இவர்களுக்கு, மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இவர்களில் அவானி சதுர்வேதி, இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, மோகனா சிங் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார். பயிற்சி நிறைவடைந்த நிலையில், அவர் தனியாக போர் விமானத்தை இயக்கியிருக்கிறார்.

இதையடுத்து, இவர் அதிநவீன போர் விமானத்தின் விமானியாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இதன்மூலம், மோகனா சிங் இந்திய விமானப்படையின் முதல் பெண் போர் விமானி என்கிற பெயரைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தொடர்ந்து எல்லாத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதற்கு இவர்கள் போன்றவர்கள் ஆகச்சிறந்த உதாரணம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க