‘’மீண்டும் போராட வேண்டும்” - தோல்விக்குப் பிறகு மனம் திறந்த ராகுல் காந்தி | Rahul gandhi speech in meeting

வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (01/06/2019)

கடைசி தொடர்பு:19:28 (01/06/2019)

‘’மீண்டும் போராட வேண்டும்” - தோல்விக்குப் பிறகு மனம் திறந்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி

டந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பி.ஜே.பி. காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் மொத்தம் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு வந்த பிறகு, சந்தித்த முதல் தேர்தல் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட எட்ட முடியாத நிலையை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தால் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். ஆனால், ராகுல் காந்தியே தலைவராகத் தொடர வெண்டும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், லாலு பிரசாத் யாதவ், ஸ்டாலின் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி இதுவரை தன்னுடைய நிலைப்பாட்டைப் பற்றிக் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 மக்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.பி-க்கள் மற்றும் காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஒரு மனதாக மீண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் ஒவ்வொருவரும் இந்திய மக்களுக்காகவும் போராடுகிறீர்கள். அரசியல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெறுப்புணர்வைத் தூண்டுபவர்கள், கோபத்தை ஏற்படுத்துபவர்கள் உங்களை எதிர்த்து நிற்கிறார்கள். ஆகையால், கூடுதல் ஆக்ரோஷத்துடன் நீங்கள் செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் உள்ளது. கடுமையான முயற்சிகளுக்குப் பின்னால், நம்மால் மீண்டும் புத்துணர்வு பெற முடியும். இவற்றை நம்மால் செய்துகாட்ட முடியும். காங்கிரஸ் எம்.பி-க்கள் 52 பேரும் ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி-க்கு எதிராகப் போராடுவார்கள்” எனக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.