தண்ணீர்ப் பிரச்னைக்காக வந்த பெண் - சரமாரியாகத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ #ShockingVideo | Video shows MLA kicking woman, he says it was self defense

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (03/06/2019)

கடைசி தொடர்பு:14:54 (03/06/2019)

தண்ணீர்ப் பிரச்னைக்காக வந்த பெண் - சரமாரியாகத் தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ #ShockingVideo

தண்ணீர்ப் பிரச்னைகுறித்து புகார் கூற வந்தவரை,  குஜராத் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ பால்ராம் தாக்கிய வீடியோ, சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜாராத் எம்.எல்.ஏ தாக்குதல்

குஜராத் மாநிலம் மேகனி நகர் பகுதியில்  இருக்கிறது, பாரதிய ஜனதா அலுவலகம். அந்தப் பகுதியில் நிலவும்  தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்கக் கோரி , அந்த அலுவலகம் அருகில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்  ஓர் இளம்பெண். அப்போது அந்த அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அகமதாபாத் நகர நரோடா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பால்ராம் தவாணி, அந்தப் பெண்ணை தாக்கினார்.  அதோடு, ஒரு கும்பல் அந்தப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். இதை வீடியோவாகப் பதிவுசெய்த ஒருவர், சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

தண்ணீர் பிரச்னை புகார் - எம்.எல்.ஏ தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான பெண், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வார்டு உறுப்பினர் நித் தேஜ்வானி என்பது தெரியவந்துள்ளது. இவர், கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து நேற்று அந்தப் பெண்ணிடம் வருத்தம் தெரிவித்த பால்ராம் தவாணி எம்.எல்.ஏ, "திட்டமிட்டுத் தாக்கவில்லை. என்னைத் தாக்க வந்ததால் தடுத்தேன்" என்று விளக்கமளித்திருக்கிறார். ஆனால், வீடியோவில் காவி உடையணிந்த பால்ராம் தவாணி, தன் காலால் அந்தப் பெண்ணை எட்டி உதைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க