கடைசியாக மதியம் 1 மணிக்கு..! - 13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானத்தைத் தேடும் சுகோய் | Aircraft gone missing with 13 persons

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (03/06/2019)

கடைசி தொடர்பு:17:36 (03/06/2019)

கடைசியாக மதியம் 1 மணிக்கு..! - 13 பேருடன் பயணித்த இந்திய விமானப்படை விமானத்தைத் தேடும் சுகோய்

இந்திய விமானப்படை விமானத்தைத் தேடும் சுகோய்

Photo Credit: Hindustan Times


இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. இதைத் தேடும் பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான  AN-32 என்ற விமானம் இன்று மதியம் 12.25-க்கு அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹாட் என்னும் இடத்திலிருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 13 பேர் பயணித்தனர். இந்த விமானம் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள இமாலய மலைத்தொடருக்கு அருகில் தரையிறங்க வேண்டியது. ஆனால், தற்போது வரை அந்த விமானம் எங்கும் தரையிறங்கவில்லை. 

மேலும் கடைசியாக இந்த விமானத்திலிருந்து மதியம் 1 மணிக்குத் தரைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாரிகளால் விமானத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதன் காரணமாக மாயமான விமானத்தைத் தேடும் பணி தொடங்கியது. செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ள தகவலின்படி, சுகோய் -30 ரக விமானம் மற்றும் சி-130 ஆகிய விமானங்கள் தற்போது மாயமான விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை அதிகாரிகளிடம் பேசியதாகவும் தேடுதல் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.