`எங்களின் மனங்களை வென்றுவிட்டீர்கள்!'- பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் சீக்கிய மக்கள் | An old Sikh man providing free drinking water to the commuters in Delhi

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (04/06/2019)

கடைசி தொடர்பு:14:05 (04/06/2019)

`எங்களின் மனங்களை வென்றுவிட்டீர்கள்!'- பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் சீக்கிய மக்கள்

இந்தியா முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் குறித்து வெளியாகும் தரவுகள் எல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. தண்ணீர்ப் பஞ்சத்தால் தனியார் டேங்கர் லாரிகளின் வாடகை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 12 ஆயிரம் லிட்டர் லாரித் தண்ணீருக்கு 4 - 5 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகளில் 40 சதவிகிதம் மக்கள் டேங்கர் லாரிகளை நம்பிதான் பிழைப்பை ஓட்ட வேண்டியுள்ளது என ஒரு  சர்வே சொல்லுகிறது. தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தின் நிலைமை மோசம் என்றால், வட மாநிலங்களின் நிலைமை படுமோசம். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் சுத்தமாக தண்ணீர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டுமல்ல தலைநகர் டெல்லியிலும் இதே நிலைதான்.

சிங்

இதற்கிடையே டெல்லியில் தாகத்தால் தவித்தபடி செல்லும் பயணிகளின் மனங்களை வென்றுள்ளார்கள் சிங் மக்கள். டெல்லியில் கடும் வெயிலில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனால் டெல்லிக்கு வரும் பயணிகள், சுற்றுலாவாசிகள் தண்ணீருக்காகத் தவிக்கும் நிலை நிலவி வருகிறது. இதைக்கண்ட அந்தப் பகுதியில் வசிக்கும் சீக்கிய இன மக்கள் பயணிகளின் தாகம் தீர்க்க களமிறங்கினர். டெல்லியில் சாலைகளில் தங்களால் முடிந்த அளவு ஸ்கூட்டர்களிலோ அல்லது வேறு ஏதேனும் வாகனங்களிலோ தண்ணீரை எடுத்துச் சென்று அதைத் தாகத்தில் தவிக்கும் பயணிகளுக்குக் கொடுத்து வருகின்றனர். குழுவாகவோ அல்லது தனியாகவோ சென்று இதை ஒரு பணியாகவே கடந்த சில நாள்களாகச் செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகப் பரவ ``நீங்கள் எங்களின் தாகத்தை மட்டுமில்லை; மனதையும் நிரப்பிவிட்டீர்கள்" என அவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிங்

``வறட்சி அதிகமாக இருப்பதால் பயணிகளுக்கு எங்கு தண்ணீர் கிடைக்கும் எனத் தெரியாது. அதனால்தான் நாங்களே களத்தில் இறங்கி இருக்கிறோம்" எனச் சேவை செய்து வரும் சீக்கிய இன மக்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க