``பிரதமர் பதவிக்கு நான்; ஜனாதிபதிக்கு நிக்!" - பிரியங்கா சோப்ராவின் அரசியல் சர்ப்ரைஸ் | Actress Priyanka Chopra said she would love to run for prime minister of India

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (04/06/2019)

கடைசி தொடர்பு:16:00 (04/06/2019)

``பிரதமர் பதவிக்கு நான்; ஜனாதிபதிக்கு நிக்!" - பிரியங்கா சோப்ராவின் அரசியல் சர்ப்ரைஸ்

இந்தியாவின் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வருவதும், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதும் இந்தியாவில் ஒன்றும் புதிதல்ல. திரைத்துறையினர் மட்டுமல்லாது, விளையாட்டுப் பிரபலங்களும் தற்போது அரசியலில் நுழைந்து தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். ஒருசிலர் சொந்தமாக அரசியல் கட்சி தொடங்கி, ஓரிரு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்கள். வெற்றி சாத்தியமாகாத நிலையில், பெரிய அரசியல் கட்சிகளில் இணைவதோ, அரசியலை விட்டு ஒதுங்குவதோ வாடிக்கை. 

ப்ரியங்கா சோப்ரா கணவருடன்

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகையும், தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவருமான பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் பதவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதை அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

`சண்டே டைம்ஸ்' இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியாவின் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறேன். எனக்கும், என் கணவர் நிக் ஜோனாஸுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்கள் பெரிதாக பிடிக்காதுதான். ஆனாலும் நாங்கள் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன். என் கணவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறேன்" என்று தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். 

சமீபகாலமாக இந்தி திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ள பிரியங்கா  சோப்ரா, ஹாலிவுட் படங்களில் நடித்து வருவதுடன், ஹாலிவுட்டில் இருந்து வெளியாகும் டிவி சீரியல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.  பாப் பாடகர் நிக் ஜோனாஸை, பிரியங்கா திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆசைப்படுவதற்கும், கனவு காண்பதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு...

நீங்க எப்படி பீல் பண்றீங்க