``காங்கிரஸ் தோல்விக்கு இவர்தான் காரணம்!"- போட்டுடைத்த அசோக் கெலாட் | "Congress is the Chief Minister for the defeat!" - Ashok Gelat

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (04/06/2019)

கடைசி தொடர்பு:18:20 (04/06/2019)

``காங்கிரஸ் தோல்விக்கு இவர்தான் காரணம்!"- போட்டுடைத்த அசோக் கெலாட்

``நாடாளுமன்றத் தேர்தலில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதற்கு, துணை முதல்வர் சச்சின் பைலட்டே காரணம்" என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.

அசோக் கெலாட்

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அம்மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இருந்துவருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 17-வது நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, சமீபத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடித்த காங்கிரஸே ராஜஸ்தான் மாநிலத்தில் தோல்வியைத் தழுவியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியானது. அம்மாநிலத்தில் ஓரிடத்தில்கூட காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக, ஜோத்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வரின் மகன் வைபவ் கெலாட், அவரை எதிர்த்து நின்ற பி.ஜே.பி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையிலும் விவாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில், செய்திச் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த அசோக் கெலாட், ``ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றதற்குத் துணை முதல்வர் சச்சின் பைலட்டே காரணம். இந்தத் தோல்விக்கு அவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும்" எனக் குற்றசாட்டியுள்ளார். அவருடைய பேட்டி, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அசோக் கெலாட்டின் இந்தப் பதிலுக்கு, சச்சின் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதன்காரணமாக, அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு இடையே மோதல் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது எனத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க