`தன்னாட்சி!' - ஒரு வார்த்தையில் கவனம் ஈர்த்த ரஹ்மான்  | AR Rahman Tweets get more attention

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (04/06/2019)

கடைசி தொடர்பு:21:33 (04/06/2019)

`தன்னாட்சி!' - ஒரு வார்த்தையில் கவனம் ஈர்த்த ரஹ்மான் 

ஏ.ஆர்.ரஹ்மான்

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கைக்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக, மத்திய அரசு நியமித்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழு, வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கொண்டுவர பரிந்துரைத்துள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் பிற மாநில மொழிகளையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக பெற்றோர்கள், மாணவர்கள் கல்வியாளர்களிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்குத் தமிழகம் மற்றும் இந்தி பேசாத பல மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டது. 

ரஹ்மான்

தமிழக மக்களின் குரலுக்கு ஆதரவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டார். நேற்று அவர் வெளியிட்ட ட்வீட்டில், “பஞ்சாப்பில் தமிழ் பரவுகிறது” என ட்வீட் செய்திருந்தார். வரைவு அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தகவல் வெளியானதையடுத்து அழகிய தீர்வு “தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!” எனப் பதிவிட்டார். இந்தநிலையில் மாநில சுயாட்சி தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன்னாட்சி எனப் பதிவிட்டுள்ள ரஹ்மான் அதற்கு கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில் என்ன அர்த்தம் என்பதற்காக லிங்கினையும் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. ரஹ்மானின் அரசியல் தொடர்பாக இந்தப் பதிவு பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.