உலகின் காஸ்ட்லியஸ்ட் மரணங்கள்! - என்ன நடக்கிறது எவரெஸ்ட்டில்? | What are the problems faced by climbers in Everest

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (05/06/2019)

கடைசி தொடர்பு:11:31 (07/06/2019)

உலகின் காஸ்ட்லியஸ்ட் மரணங்கள்! - என்ன நடக்கிறது எவரெஸ்ட்டில்?

இந்த ஆண்டு,  எவரெஸ்ட் சிகரம் ஏறியவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  மே மாதம் 31- ம் தேதியுடன் மலையேற்றத்துக்கான அனுமதி முடிவடைந்தது.  இதுவரை, 4,800 பேர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை எட்டியுள்ளனர். அவர்களில்  300 பேர், எவரெஸ்ட் சிகரத்திலேயே பலியாகியுள்ளனர். மே மாதத்தில், `வெதர் விண்டோ' என்று அழைக்கப்படும் 10 முதல் 15 நாள்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு  சிறந்த காலம்.  சாதாரண காலத்தில் 120 கிலோமீட்டர் வேகத்தில் இங்கே காற்று வீசும். வெதர் விண்டோ காலத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.  

எவரெஸ்ட் சிகரம்

நேபாள சுற்றுலாத் துறையிடம் ஒரு குழுவாக அனுமதி பெற, 7,65,000 ரூபாய் செலவாகும். இதில் 2,80,000 ரூபாய் வரை திருப்பித் தரப்பட வாய்ப்பு உண்டு.  அதுவும், விதிகளுக்கு உட்பட்டு மலையேற்றத்தில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டால்  மட்டுமே! தனிநபராக மலை ஏற விரும்பினால் 24,00,000 ரூபாய் செலவாகும். இதில் போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி, மருந்துகள், மலை ஏறும்போது அணியும் பிரத்யேக உடை, கூடாரம் போன்றவை அடக்கம்.  இமயமலையை நன்கு அறிந்த வழிகாட்டியும் உங்களுடன் வருவார். வழிகாட்டிக்கு மட்டும் 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். 

மலையேற்றத்தின்போது, கயிறு, ஏணி, ஆக்ஸிஜன் மாஸ்க், தங்கும் கூடாரம் போன்றவற்றை நீங்கள் சுமந்தபடி நடக்க வேண்டும்.   மலையேற்றத்தின்போது  அணியும் பிரத்யேக ஜாக்கெட்டுக்கு மட்டும் 80,000 ரூபாய் செலவாகும். மலையேற்ற பூட்ஸின் விலை ரூ.50,000 ரூபாய். இது இல்லாமல், கைக்கு தனியாக, காலுக்கு தனியாக என பல உடைகள் உள்ளன.  இதற்கே நீங்கள் 5 லட்சம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும்.  இவ்வளவு செலவழித்து மேலே சென்றாலும் இயற்கை மனம் வைத்தால் மட்டுமே உயிரோடு திரும்பி வர முடியும். அப்படிப்பார்த்தால், உலகிலேயே சாவைத் தேடுச் சென்று சாகும் காஸ்ட்லியஸ்ட் 'டெத்'கள் இதுவாகத்தான் இருக்கும். மலை ஏற ஏற 8,000 அடிக்குப் பிறகு உங்கள் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.  நல்ல ஃபிட்டாக இருந்தாலும் மேலே ஏற ஏற  உடற் சோர்வு,  தலைச்சுற்று, தலைவலி, வாந்தி போன்றவை உங்களைப் பயமுறுத்தும்.  அப்போது, நீங்கள் உடனடியாக அலர்ட் ஆகிவிட வேண்டும். 

எவரெஸ்ட் சிகரம்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்தைத் தொட, 29,000 அடி உயரம் நீங்கள் நடக்க வேண்டும். 26,000 அடிக்கு மேல் நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் விலை மதிப்பில்லாதது. ஏனென்றால், அடுத்த 3,000 அடிக்குள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் உயிர் பிரியலாம். இவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், ஒவ்வோரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்கள் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க