``590 கிலோ கஞ்சாவை தொலைத்துவிட்டீர்களா... பயப்படாதீங்க!”- அஸ்ஸாம் போலீஸின் செம ட்வீட் | police caught ganja and tweeted

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/06/2019)

கடைசி தொடர்பு:13:15 (05/06/2019)

``590 கிலோ கஞ்சாவை தொலைத்துவிட்டீர்களா... பயப்படாதீங்க!”- அஸ்ஸாம் போலீஸின் செம ட்வீட்

சமூக வலைதளம்

இது, சமூக வலைதளக் காலம். அரசுகள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கம் மூலம் தங்களுக்கு வேண்டிய தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்திவருகின்றனர். காவல் துறையும் இதுபோன்ற சமூக வலைதளப் பக்கத்தில் பல்வேறு வழக்குகள் குறித்து சில சிசிடிவி காட்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுவருகின்றன. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த சமூக வலைதளப் பக்கங்களை போலீஸார் பயன்படுத்திவந்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

சில மாநில போலீஸார், நகைச்சுவையாகப் பல ட்வீட்டுகள் போட்டு வைரலான பதிவுகளும் உண்டு. மும்பை போலீஸின் ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு ட்வீட்டுகள் நகைச்சுவையாகப் போடப்படுவதுண்டு. இதேபோன்று, அஸ்ஸாம் மாநில போலீஸும் நேற்று ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தது. 

அதில், 590 கிலோ அளவிலுள்ள கஞ்சா கொண்ட பெட்டிகளைப் படமாகப் பதிவுசெய்து, அதன்கீழே `சகோலியா செக் பாயின்ன்டுக்கு அருகே லாரியுடன் அதிக எடை (590 கிலோ) கொண்ட கஞ்சாவை யாராவது தொலைத்துவிட்டீர்களா? பயப்பட வேண்டாம். நாங்கள் அதனைக் கண்டுபிடித்துவிட்டோம். இதன் உரிமையாளர்கள், தூப்ரி மாவட்ட காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அஸ்ஸாம் போலீஸ்

நேற்று, கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையின்போது, இந்தக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி யார் என்று தெரியாத நிலையில், போலீஸாரின் இந்த ட்வீட் செம வைரல்.