`மனிதத்தன்மையுடன் இதை மட்டும் செய்யுங்கள்' - ஜொமோட்டோ நிறுவனத்தின் ஒரு ரெக்வெஸ்ட் | zomato asking customers to offer water to delivery partners

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (06/06/2019)

கடைசி தொடர்பு:11:35 (06/06/2019)

`மனிதத்தன்மையுடன் இதை மட்டும் செய்யுங்கள்' - ஜொமோட்டோ நிறுவனத்தின் ஒரு ரெக்வெஸ்ட்

தண்ணீர்ப் பஞ்சமும் கடுமையான வெயிலும் வாட்டிவதைக்கும் நிலையில்,  கஸ்டமர்களுக்கு புதிய கோரிக்கை ஒன்றை ஜொமோட்டோ நிறுவனம் விடுத்துள்ளது.

ஜொமோட்டோ

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. வெயிலின் தாக்கம் வேறு அதிகமாக உள்ளது. சிட்டியைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் காரணமாக வெளியில் வருவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பலரும் உணவுத் தேவைகளை ஜொமோட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் ஆர்டர் செய்துவருகின்றனர். மற்ற நாள்களை விட இந்த வெயில் காலத்தில் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்பவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்ததை டெலிவரி செய்யும் டெலிவரி பாய்கள், தண்ணீர்ப் பிரச்னையால் கஷ்டப்படுவதாக ஜொமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கோரிக்கை

``உங்களைத் தேடிவரும் டெலிவரி பாய்களுக்குத் தண்ணீர்  கொடுங்கள். நாம் செய்யும் சிறிய உதவியால் வெப்பத்தை எதுவும் செய்ய முடியாது. இருப்பினும் வெயிலில் இருந்து காத்துக்கொள்ள அவர்களுக்கு நீங்கள் செய்வது உதவிபுரியும். இது அவர்கள் பணியின் ஒரு அங்கம் என நினைக்காமல், மனிதத்தன்மையுடன் டெலிவரி செய்ய வருபவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தால் உதவியாக இருக்கும்" என டெலிவரி பாய்களுக்காக ஜொமோட்டோ நிறுவனம் குரல் கொடுத்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க