`` விமானம் காணாமல் போன செய்தியே சந்தியா சொல்லித்தான் தெரியும்!" - விமானி ஆசிஷின் உறவினர் | pilot wife was on duty when the aircraft was missing!

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/06/2019)

கடைசி தொடர்பு:20:03 (06/06/2019)

`` விமானம் காணாமல் போன செய்தியே சந்தியா சொல்லித்தான் தெரியும்!" - விமானி ஆசிஷின் உறவினர்

சாம் மாநிலம் ஜோர்கண்ட் பகுதியில் இருந்து அருணாசலப் பிரதேசத்திலுள்ள மெஞ்சுகா விமானப்படைக்குச் சென்ற ஏ.என்.32 ரக விமானம் கடந்த திங்கள் கிழமை மாயமானது. இந்த விமானத்தில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் பயணம் செய்தனர். எட்டு விமானிகளில் ஹரியானவைச் சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வாரும் ஒருவர். மாயமான விமானம் ஜோர்கண்ட் பகுதியிலிருந்து புறப்பட்டபோது அந்த விமான நிலையத்தின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவில் அவருடைய மனைவி சந்தியா தன்வார் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

விமானி ஆசிஷ்

இது குறித்து பிரபல தனியார் நிறுவனத்துக்கு விமானி ஆசிஷ் தன்வாரின் உறவினர் கொடுத்த பேட்டியில், ``ஆசிஷுக்கும், சந்தியாவுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சந்தியாவும் விமானப் படையில் பணியாற்றுகிறார். ஆசிஷ் சென்ற விமானம் ஜோர்கண்ட் விமான தளத்திலிருந்து புறப்படும்போது விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில்தான் சந்தியா இருந்திருக்கிறார். விமானம் காணாமல் போனது குறித்து அவர்தான் எங்களுக்குத் தகவல் கொடுத்தார். முதலில் விமானம் தவறுதலாக சீன எல்லைக்குச் சென்றிருக்கும். ஒருவேளை அங்கே தரையிறங்கி இருக்கலாம் என நினைத்தோம். ஆனால், மலையில் எங்காவது மோதியிருக்கும் என இப்போது தகவல் வெளிவருவது எங்களுக்கு வருத்தம் அளிக்கின்றது.

கடந்த மாதம் 2-ம் தேதி ஆசிஷும், சந்தியாவும் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வீட்டுக்கு வந்திருந்தனர். இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

ஆசிஷின் மாமா கூறும்போது, `ஆசிஷ் சின்ன வயதிலிருந்தே ராணுவத்தில் பணியாற்றவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆசிஷ் குடும்பத்தில் ஐந்து பேர் ராணுவத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். அசிஷின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் தான்! ஆஷிஷ் பி.டெக் முடித்துவிட்டு விமானப்படையில் சேர்ந்தார். ஆசிஷ் சென்ற விமானம் காணாமல் போனது தெரிந்ததில் இருந்து ஆசிஷின் அம்மா அழுது கொண்டே இருக்கிறார்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க