`அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!’ - ஆர்.எஸ்.எஸ்-ஐ சுட்டிக்காட்டிய சரத் பவார் | RSS members know it very well says sharad pawar

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (07/06/2019)

கடைசி தொடர்பு:12:22 (07/06/2019)

`அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!’ - ஆர்.எஸ்.எஸ்-ஐ சுட்டிக்காட்டிய சரத் பவார்

சரத் பவார்


நாடாளுமன்றத் தேர்தலில், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவில் 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.  தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும், நமது கட்சி வலுவாகத்தான் உள்ளது .தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் எனத் தேற்றினார்.  மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது.  

இந்நிலையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உரையாற்றிய சரத் பவார், ``நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கவலைகொண்டிருக்க வேண்டாம். சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள். இந்தத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தேர்தல் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடக்கலாம். தேர்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளன. இன்றிலிருந்தே அதற்கான பணிகளைத் தொடங்குங்கள்.

தொண்டர்கள் பணியாற்ற தயாராக இருங்கள். வாக்காளர்கள் பட்டியலைக்கொண்டு அவர்களை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நீங்கள் யாரை எல்லாம் சந்தித்துள்ளீர்கள் யாரைச் சந்திக்கவில்லை என்ற பட்டியலைத் தயாராக வைத்திருங்கள். ஒவ்வொரு குடும்பத்தினரையும் பற்றித் தெரித்துவைத்திருங்கள். ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தியுங்கள். இல்லையென்றால் வெற்றி சாத்தியப்படாது. ஆர்.எஸ்.எஸ் தேர்தல் பிரசாரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் 5 வீடுகளுக்குச் செல்லும்போது, ஒரு வீடு பூட்டி இருந்தால் மீண்டும் மீண்டும் செல்வார்கள். தாங்கள் கூற வந்ததை திரும்பத் திரும்பச் சென்று கூறுவார்கள். மக்களுடன் எப்படி இணைந்து இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தெரிந்துவைத்துள்ளனர்” என்று பேசினார்.