அமித் ஷாவுக்கு ஒதுக்கப்படும் வாஜ்பாய் இருந்த வீடு -கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் என்ன ஸ்பெஷல் | Amit Shah to be Allocated Vajpayee's Bungalow

வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (07/06/2019)

கடைசி தொடர்பு:09:56 (07/06/2019)

அமித் ஷாவுக்கு ஒதுக்கப்படும் வாஜ்பாய் இருந்த வீடு -கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் என்ன ஸ்பெஷல்

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ணா மேனன் மார்க் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார்.  2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக வாஜ்பாய் அங்கு வாழ்ந்துவந்தார்.

வாஜ்பாய்

வாஜ்பாய்க்கு 13 தான் அதிர்ஷ்டமான எண். ஆனால், அந்த வீட்டின் எண் 8 என இருந்தது. எட்டு, வாஜ்பாய்க்கு அதிர்ஷ்டமே இல்லாத எண். அதனால், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தன் வீட்டு எண்ணை 6A என மாற்றிக்கொண்டார். 

தற்போது அந்த வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவருமான அமித் ஷா குடியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஜ்பாய் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்த வீட்டை காலிசெய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டைப் பார்வையிட்ட அமித் ஷா, அங்குதான் வசிக்க வேண்டும் என விருப்பப்பட்டு, வீட்டில் சில மாற்றங்களைச் செய்யக் கூறியுள்ளார்.

அமித்ஷா

அதன்படி, தற்போது அந்த வீட்டில் சில வேலைகள் நடந்துவருகின்றன. அவை முடிந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் அமித் ஷா தன் குடும்பத்துடன் கிருஷ்ணா மேனன் மார்க் பகுதிக்குச் செல்வார். அதை வீடு என்று சொல்வதைவிட பங்களா என்றே கூற வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு பொருளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாம். அங்குள்ள அறைகள், மரச் சாமான்கள், கழிவறைகூட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாம். அந்த பங்களாவுக்குதான் அமித் ஷா செல்கிறார்.

வாஜ்பாயைத் தவிர வேறு சில தலைவர்களும் அந்த வீட்டில் வசித்துள்ளனர். வாஜ்பாய்க்கு முன்னதாக அங்கு தி.மு.க-வின் முரசொலி மாறன் தங்கியிருந்துள்ளார். 2003-ம் ஆண்டு அவர் இறந்த பிறகு வீடு காலி செய்யப்பட்டது. வாஜ்பாய் தன் வீட்டு எண்ணை மாற்றியதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

பி.வி. நரசிம்ம நாவ் பிரதமாக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, மன்மோகன் சிங்கும் ஐந்து வருடங்கள் கிருஷ்ணா மேனன் மார்க் வீட்டில் வசித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 


அதிகம் படித்தவை