`கிரிக்கெட்டால் இணைந்தோம்!’ - மாலத்தீவு அதிபருக்கு பேட் கிஃப்ட் கொடுத்த மோடி | PM Modi gifts bat to Maldives President

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (08/06/2019)

கடைசி தொடர்பு:10:40 (09/06/2019)

`கிரிக்கெட்டால் இணைந்தோம்!’ - மாலத்தீவு அதிபருக்கு பேட் கிஃப்ட் கொடுத்த மோடி

மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்தது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தேர்தலில் வெற்றிபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தார். அங்கு வழிபாடு முடித்துக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கேரள பயணத்தை முடித்துவிட்டு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவு சென்றார்.  மாலே விமானநிலையத்தில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் பிரதமர் மோடியை வரவேற்றார். இதையடுத்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மதுவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது மாலத்தீவு அதிபருக்கு கிரிக்கெட் பேட் ஒன்றையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் பேட்


இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ``கிரிக்கெட்டால் இணைந்தோம்;  எனது நண்பரும் மாலத்தீவு அதிபருமான இப்ராஹிம் முகம்மது கிரிக்கெட் ரசிகர். இதன் காரணமாக உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டினை அவருக்குப் பரிசாக அளிக்கிறேன்”எனப் பதிவிட்டுள்ளார். மோடியின் இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகிறது. மாலத்தீவில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டிக்கொடுப்பது. மாலதீவுகளில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ மூலம் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் பிசிசிஐ குழுவினர் மாலத்தீவு சென்றது குறிப்பிடத்தக்கது.