‘ரூ. 80 கோடி; 4 படுக்கை அறைகள்; மாடுலர் கிச்சன்’ - எம்.பி-களுக்காக நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய குடியிருப்பு | 36 new flats ready for newly-elected MPs

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (10/06/2019)

கடைசி தொடர்பு:09:28 (10/06/2019)

‘ரூ. 80 கோடி; 4 படுக்கை அறைகள்; மாடுலர் கிச்சன்’ - எம்.பி-களுக்காக நவீன வசதிகளுடன் உருவாகும் புதிய குடியிருப்பு

சமீபத்தில் இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பலர் புதிய எம்.பி-க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடியிருப்பதற்காக டெல்லியில் பிரத்தியேக குடியிருப்பு தயாராகி வருகிறது.

எம்.பி குடியிருப்புகள்

இதற்கு முன்னதாக டெல்லி நார்த் அவென்யூ பகுதியில் இருந்த கட்டடங்கள், இடிக்கப்பட்டு தற்போது மீண்டும் அங்கு கட்டப்பட்டுள்ளன. இங்கு மொத்தம், 36 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் நான்கு படுக்கை அறைகள். மாடுலர் கிச்சன், சோலார் பேனல்கள், எல்.இ.டி விளக்குகள், அலுவலக பகுதி, அடித்தள கார் நிறுத்துமிடம் ஆகிய நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. 

எம்.பி குடியிருப்புகள்

PC:Theprint

இந்தக் குடியிருப்புகளைக் கட்ட கடந்த 2017-ம் ஆண்டு 92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதே ஆண்டே கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பணிகள் 80 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு அடுத்த -மாத இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

எம்.பி குடியிருப்புகள்

PC:Theprint

நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 300 எம்.பி-க்கள் புதிதாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் டெல்லியில் தங்குவதற்காக மத்திய அரசு தற்காலிக ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது. விரைவில் பலரும் தங்கள் புதிய குடியிருப்புகளுக்கு செல்லவுள்ளனர். முன்னதாக இருந்த எம்.பி-க்கள் டெல்லி வரும்போதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில்தான் தங்கியிருந்தனர். இதனால் மத்திய அரசுக்கு அதிகம் செலவான காரணத்தால் அதைக் குறைக்கவே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புதிய குடியிருப்புக்குச் செல்லும் எம்.பி-க்களின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.