யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் `குட்டு'! - பத்திரிகையாளரை விடுவிக்க உத்தரவு | SC ordered to release the journalist who spread the news against Yogi Adithyanath

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (11/06/2019)

கடைசி தொடர்பு:13:00 (11/06/2019)

யோகி ஆதித்யநாத்துக்கு உச்ச நீதிமன்றம் `குட்டு'! - பத்திரிகையாளரை விடுவிக்க உத்தரவு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்துப் பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பிரசாந்த் கனோஜா என்ற செய்தியாளர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண் புகார் தெரிவித்திருந்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அந்தப் பெண், யோகி ஆதித்யநாத் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றம்

இந்த வீடியோ பதிவை வெளியிட்டதற்காக, டெல்லியில் உள்ள பிரசாந்தின் வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற போலீஸார், அவரைக் கைது செய்தனர். பின்னர் அன்று மாலையே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். யோகிக்கு எதிராக புகார் கூறிய பெண்ணையும் போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், பிரசாந்த் கனோஜாவின் மனைவி, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தார். அதில் தன் கணவரை விடுவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பத்திரிகையாளர் பிரசாந்த்தை உடனடியாக விடுவிக்க இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலுக்கு உச்ச நீதிமன்றம், குட்டு வைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க