`அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யலாமா?!' - சட்டம் என்ன சொல்கிறது? | Second Marriage by government staff though permitted by Personal Law amounts to Misconduct

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (11/06/2019)

கடைசி தொடர்பு:13:56 (11/06/2019)

`அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்யலாமா?!' - சட்டம் என்ன சொல்கிறது?

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் செய்ய அரசு ஊழியர்களுக்கு அனுமதியில்லை என்று கேரள பொதுப் பணித்துறை அளித்த விளக்கத்தால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரின் இரண்டாம் திருமணம் தடைப்பட்டது. 

அரசு ஊழியர் இரண்டாம் திருமணம்

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் (பெயர் விவரம் அளிக்கப்படவில்லை) கேரள பொதுப்பணித்துறையில் பணிபுரிந்து வருகிறார். இஸ்லாம் மதத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாம் திருமணம் செய்ய மத திருமண சட்டத்தில் அனுமதி உள்ளது. எர்ணாகுளத்தில் பணிபுரிந்துவரும் அவர், இரண்டாம்  திருமணம் செய்ய  அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இஸ்லாம் திருமண சட்டத்தைக் காரணம் காட்டி முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே அவர் இரண்டாம் திருமணம் புரிய விண்ணப்பித்திருந்தார். அவரின் விண்ணப்பத்துக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை, `அரசு ஊழியராக இருந்துகொண்டு  இரண்டாம் திருமணம் செய்வது அரசு விதிமுறைகளுக்குப் புறம்பான செயல்' என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. 

``அரசு ஊழியராக இருப்பவர், தன் பணியில் மட்டும் நேர்மை, ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையிலும் அறநெறியுடன் நடந்துகொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால், 1960-ம் ஆண்டு வகுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளின்படி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்பவர்கள் முறையான அனுமதி பெற வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு திரிபுரா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், ``அரசு ஊழியர்கள், மத திருமணச் சட்டம் அனுமதித்தாலும் முறையாக அனுமதி பெறாமல் இரண்டாம் திருமணம் செய்வது விதிகளை மீறிய செயல்'' என்று தீர்ப்பளித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க