`கடந்த முறை அ.தி.மு.க; இந்த முறை ஒய்.எஸ்.ஆர்!' - மோடியின் ஆஃபரை யோசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி | modi and amit shah offers deputy speaker of the Lok Sabha to the YSRCP

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (12/06/2019)

கடைசி தொடர்பு:10:47 (12/06/2019)

`கடந்த முறை அ.தி.மு.க; இந்த முறை ஒய்.எஸ்.ஆர்!' - மோடியின் ஆஃபரை யோசிக்கும் ஜெகன்மோகன் ரெட்டி

நடந்து முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு ஆந்திர அரசியலில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி புதிதாகப் பல விஷயங்களை மேற்கொள்ள முயன்று வருகிறார். அமைச்சர்கள் தேர்வு, துணை முதல்வர்கள் தேர்வு, முதல் மீட்டிங் என அனைத்திலும் கவனம் ஈர்த்து வருகிறார். இதற்கிடையே, ஜெகன்மோகன் ரெட்டிக்கு பா.ஜ.க ஒரு ஆஃபர் ஒன்றைக் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்களவை வரும் 17-ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. கடந்த முறை மக்களவை, மாநிலங்களவை சேர்த்து 50 எம்.பி-க்களை கொண்டு வலுவாக இருந்த அ.தி.மு.க-வுக்குத் துணை சபாநாயகர் பதவியை கொடுத்தது பா.ஜ.க.

ஜெகன்மோகன் ரெட்டி

அதேபோல் இந்த முறை 22 எம்.பி-க்களை வைத்துள்ள ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியைக் கொடுக்க பா.ஜ.க முன்வந்துள்ளதாக ஆங்கில, ஆந்திர ஊடகங்கள் பேசி வருகின்றன. இதற்காகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி நரசிம்ம ராவ் ஜெகனை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பில் மோடி, அமித் ஷாவின் விருப்பத்தை எடுத்துச் சொல்லியுள்ளார். 

ஜெகன் - மோடி

எனினும் இதுகுறித்து ஜெகன்மோகன் எந்த முடிவும் இதுவரை சொல்லவில்லையாம். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் கட்சி அதிக இடங்களைப் பெற்றதுக்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் வாக்குகள் முக்கியமாக இருந்தது. அதனால் பா.ஜ.க பக்கம் சாய்வதால் அது அரசியல் ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்துமா? ஆந்திராவின் வளர்ச்சிக்கு மத்திய அரசை அனுசரித்துச் செல்லலாமா என்பதெல்லாம் குறித்து கட்சி சீனியர்களிடம் ஜெகன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெகன் - மோடி

நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்கிறார் ஜெகன். தேர்தல் வெற்றிக்குப் பின் நேரில் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த ஜெகன் இந்தக் கூட்டத்தின் போதும் மீண்டும் மோடியைச் சந்திக்கிறார். அப்போது தனது விருப்பத்தைத் தெரிவிப்பார் எனத் தெரிகிறது. இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க