``எனக்கும் என் மகளுக்கும் ஒரே பிறந்தநாள்'' ஐ.டி.லாவண்யா பூரிப்பு! | IT Lavanya delivered baby girl yesterday

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (12/06/2019)

கடைசி தொடர்பு:18:20 (12/06/2019)

``எனக்கும் என் மகளுக்கும் ஒரே பிறந்தநாள்'' ஐ.டி.லாவண்யா பூரிப்பு!

ன் மனவலிமைக்கு முன்னால், கத்தியும் இரும்பு ராடும் ஒரு பொருட்டே இல்லை என்று நிரூபித்திருக்கிறார் லாவண்யா. சென்னை பெரும்பாக்கம் - தாழையூர் சாலையில் நள்ளிரவில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட அதே லாவண்யாதான். சில தினங்களுக்கு முன்னால், `இன்னும் நாலு நாள்ல எனக்குப் பிரசவம்' என்று, நிறைமாதக் கர்ப்பிணியாய் விகடனுக்கு பேட்டிகூட கொடுத்திருந்தார். நேற்றைய தினம் (11-6-19) முற்பகல் 11.30 மணிக்கு லாவண்யாவுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மாலை இந்தத் தகவலை வாட்ஸ் அப்  மூலம் நம்மிடம் தெரிவித்தார். 

லாவண்யா

``என் கணவர் ஆசைப்பட்டது போலவே, என்னை மாதிரியே பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சிசேரியன் செய்து பாப்பாவை வெளியே எடுத்தார்கள். மூன்று கிலோவுக்கும் கூடுதல் எடையுடன் ஆரோக்கியமாக இருக்கிறாள். இதைவிட சந்தோஷமான ஒரு செய்தி சொல்லட்டுமா? என் மகளுக்கும் எனக்கும் ஜூன் 11 தான் பிறந்த நாள். யெஸ், நான் பிறந்த அதே நாளில் என் மகளும் பிறந்திருக்கிறாள்'' - அம்மா லாவண்யாவின் குரலில் பிள்ளை பெற்ற சோர்வைத் தாண்டி பூரிப்பு பூத்துக் குலுங்குகிறது.