`கிரிக்கெட்டை ஊக்குவித்தமைக்காக நன்றி!'- பிரதமர் மோடியைப் பாராட்டிய சச்சின் | Sachin Tendulkar praises PM Modi

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (12/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (12/06/2019)

`கிரிக்கெட்டை ஊக்குவித்தமைக்காக நன்றி!'- பிரதமர் மோடியைப் பாராட்டிய சச்சின்

பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாகச் செய்த செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

சச்சின்

நாட்டில் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, சமீபத்தில் மாலத்தீவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டினை அந்நாட்டு அதிபருக்கு, மோடி பரிசாக அளித்திருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த மோடி, ``என் நண்பர் இபுசோலிக், ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர். எனவே, அவருக்கு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட பேட்டினைப் பரிசாக அளித்துள்ளேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``கிரிக்கெட்டை ஊக்குவித்தமைக்காக பிரதமர் மோடிக்கு என் நன்றி. உலகக் கோப்பை நடைபெற்றுவரும் இந்தச் சூழலில், கிரிக்கெட்டின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்தச் செயல் உள்ளது. கிரிக்கெட் வரைபடத்தில் மாலத்தீவுகள் விரைவில் வரும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் பி.ஜே.பி. வெற்றிபெற்றமைக்கு பிரதமர் மோடிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதமர் மோடியும் நன்றி தெரிவித்திருந்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை