2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப் | Amitabh Bachchan Pays 2100 Farmers Loans

வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (13/06/2019)

கடைசி தொடர்பு:10:06 (13/06/2019)

2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள விவசாயிகளில் மொத்தக் கடனையும் தான் அடைப்பதாகக் கூறினார். இது கூறி ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போதுதான் சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றியுள்ளார்.

விவசாயிகளுடன் அமிதாப்

PC : Amitabh Blog

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2,100 ஏழ்மையான விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேற்று முன் தினம் தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொருவரும் எவ்வளவு கடன் கட்ட வேண்டும் என்பதை அறிந்து அந்த மொத்த தொகையும் ஒரே முறையில் வங்கியில் கட்டியுள்ளார். 

அமிதாப் பச்சன்

‘நான் சொன்னதைச் செய்துவிட்டேன்’ என தன் வலைப்பதிவு (Blog) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் கூறிய மற்றொரு அறிவிப்பையும் மறுநாளே செய்து முடித்துள்ளார். காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்துள்ளார்.

கலங்கும் பெண்

இது பற்றி தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ‘ தங்கள் குடும்பத்தின் தூணாக இருந்த ஒருவரை இழந்த 44 குடும்ப உறுப்பினர்களை நேற்று நான் சந்தித்தேன். அவர்கள் இங்கு வரும்போது மிகவும் கடினமான மற்றும் சோகமான முகத்துடன் வந்தனர். அவர்கள் தங்களின் அன்பானவர்களை, கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்துள்ளனர். நான் பார்த்த அனைத்துப் பெண்களும் மிகவும் சிறு வயதினர். சிலர் கைக்குழந்தையுடன் இருந்தனர். 

சி.ஆர்.பி.எஃப் வீரர்களுடன் அமிதாப்

அந்தக் குடும்பங்களுக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என விரும்பினேன். இன்று அதைச் செய்து முடித்துவிட்டேன். மிகவும் நிம்மதியாக உள்ளது. சி.ஆர்.பி.எஃப் மூத்த அதிகாரிகள் மூலமே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. உயரமான மலைப் பகுதி மற்றும் எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களை அரவணைக்க வேண்டும் என்பது எனது  கோரிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.