பினராயி விஜயனுக்கு எதிராகக் கருத்து!- மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 119 பேர் மீது வழக்கு | abusing comments against kerala cm 119 people booked

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (13/06/2019)

கடைசி தொடர்பு:12:16 (13/06/2019)

பினராயி விஜயனுக்கு எதிராகக் கருத்து!- மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 119 பேர் மீது வழக்கு

மூக வலைதளங்களில் பினராயி விஜயன் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்ததாகக் கேரளாவில் 119 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. வழக்கு பாய்ந்தவர்களில் 12 பேர் கேரள அரசு ஊழியர்கள். ஒருவர் மத்திய அரசு ஊழியர் ஆவார்.

பினராயி விஜயன்

கேரள அரசு இணையதளத்தில் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சபரிமலை விவகாரத்தின்போது பினராயி விஜயன் குறித்து கருத்து தெரிவித்தவர்கள், வீடியோ பதிவேற்றியவர்கள் 26 பேர் கைது நடவடிக்கைக்குள்ளானார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவை விமர்சித்ததாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

எதிர்க்கட்சித் தலைவரை தரக்குறைவாக விமர்சித்ததாகக் கேரள போலீஸாரிடம் 11 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பினராயி விஜயன் கேரளத்தில் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஜனவரி மாதம் வரை வந்த புகார்கள் குறித்த விவரங்களே தெரிவிக்கப்பட்டுள்ளன. 

சபரிமலை

புகாருக்குள்ளான அரசு ஊழியர்கள் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலரை ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி சஸ்பெண்டு செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் கேரள சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த எம்.கே. முனீர் இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, விவரங்கள் கேரள அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கேரள முதல்வர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போல செயல்படுவதாகவும் விமர்சித்த பொதுமக்கள் மீது வழக்குகள் போடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை