டாடா கன்சல்டன்ஸியில் பணியாற்றும் 100 கோடீஸ்வரர்கள்! | 100 TCS employees earn more than Rs 1 crore

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (13/06/2019)

கடைசி தொடர்பு:14:55 (13/06/2019)

டாடா கன்சல்டன்ஸியில் பணியாற்றும் 100 கோடீஸ்வரர்கள்!

முன்னணி ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தில், 103 ஊழியர்கள்வரை ஆண்டு வருமானமாக ஒரு கோடி ரூபாய்க்குமேல் சம்பாதிப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2018-19 நிதியாண்டில், டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உள்ளிட்ட விவரம் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜேஷ் கோபிநாதன், சி.ஓ.ஓ என்.ஜி.சுப்ரமணியம் தவிர்த்து 103 ஊழியர்களின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 91 ஆக இருந்தது.

டாடா கன்சல்டன்ஸி

டி.சி.எஸ் லைஃப் சயின்சஸ், ஹெல்த்கேர் அண்ட் பப்ளிக் சர்வீசஸ் பிசினஸ் பிரிவின் தலைவர் டெபசிஸ் கோஷ் ரூ.4.7 கோடியும், பிசினஸ் & டெக்னாலஜி சர்வீசஸ் பிரிவின் தலைவர் கிருஷ்ணன் ராமானுஜம் ரூ.4.1 கோடியும், நிறுவனத்தின் பேங்கிங், ஃபைனான்ஸியல் சர்வீசஸ் அண்ட் இன்ஷூரன்ஸ் பிசினஸ் பிரிவின் தலைவர் கீர்த்திவாசன் ரூ.4.3 கோடியும் ஆண்டு வருமானமாகச் சம்பாதிக்கிறார்கள். இந்தக் கோடீஸ்வரர்களில் 72 வயதுடைய ஒருவரும் இருக்கிறார். 

மற்றொரு முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 60 ஊழியர்கள்வரை ஆண்டு வருமானமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக தெரியவருகிறது. இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களைப்போல் பங்குகள் அடிப்படையிலான ஊக்கத்தொக, டி.சி.எஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை.