`AN - 32 விமான விபத்தில் 13 பேரும் உயிரிழப்பு!' - 10 நாள்களுக்குப் பின் அறிவித்த விமானப்படை | No survivors in the crash of An-32 aircraft of Indian Air Force

வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (13/06/2019)

கடைசி தொடர்பு:15:27 (13/06/2019)

`AN - 32 விமான விபத்தில் 13 பேரும் உயிரிழப்பு!' - 10 நாள்களுக்குப் பின் அறிவித்த விமானப்படை

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்காட் பகுதியிலிருந்து அருணாசலப் பிரதேசத்திலுள்ள மெஞ்சுகா விமானப்படைக்குச் சென்ற ஏ.என்.32 ரக விமானம் கடந்த ஜூன் 3-ம் தேதி மாயமானது. இந்த விமானத்தில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் பயணம் செய்தனர்.  

AN 32

பயணத்தைத் தொடங்கிய 33 நிமிடங்களில் விமானம் மாயமானதால் அதைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. AN 32 விமானம் பயணித்த பாதை மலை சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதி என்பதால், இந்திய செயற்கைக்கோள்களால்கூட ஒருகட்டத்துக்கு மேல் ஊடுருவித் தேடுதல் பணியைச் செய்ய முடியவில்லை. சுகாய் 30 ரக போர் விமானங்களும் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. 

அருணாச்சல பிரதேசம்

இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் டாடோ நகரில் தென் கிழக்கே 16 கி.மீ தொலைவில் இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர் ஒன்று, AN 32 விமானத்தின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடித்தது. தொடர்ந்து  அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தில் இருந்தவர்களின் நிலை தெரியாமல் இருந்த நிலையில் AN 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மலையேற்ற குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ட்வீட்