`ஆயுளில் இரண்டரை ஆண்டு குறையும்!'- இந்தியர்களை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு | Life expectancy down by 2.6 years due to air pollution, finds study

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (13/06/2019)

கடைசி தொடர்பு:19:20 (13/06/2019)

`ஆயுளில் இரண்டரை ஆண்டு குறையும்!'- இந்தியர்களை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு

திகரித்துவரும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்களின் வாழ்நாள் சராசரியாக 2.6 ஆண்டுகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு மற்றும் மனிதர்களின் வாழ்நாள் பற்றி டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பான `சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' (Centre for Science and Environment) மைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டினால் உயிரைப்பறிக்கும் பல்வேறு சுவாச நோய்கள் உண்டாவது தெரியவந்தது. இதனால், சராசரியாக இந்தியர்களின் வாழ்நாள் 2.6 ஆண்டுகள் குறைந்துபோவதும் தெரியவந்துள்ளது. ஆனால், உலக அளவில் காற்று மாசுபடுவதன் காரணமாக குறையும் வாழ்நாள் சராசரியாக 1.6 ஆண்டுகள்தான். ஆக, இந்தியர்கள் ஓராண்டுக்கு முன்பே இறந்து போகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. 

சுவாசக்கோளாறு

மேலும் இந்த ஆய்வில், காற்றில் உள்ள  சிறிய துகள்கள் நுரையீரலிருந்து ரத்தம் மற்றும் செல்களுடன் சேர்ந்து ஒவ்வோர் உறுப்புக்கும் பயணம் செய்து, அந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் சுவாச நோய்கள், இதய பாதிப்பு, சர்க்கரைநோய் மற்றும்  டிமென்ஷியா போன்ற மறதி நோய்கள், மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. முக்கியமாக, `நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்' (Chronic Obstructive Pulmonary Disease - COPD) என்னும் சுவாச நோயால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும் அதோடு நுரையீரல் புற்றுநோய் 33 சதவிகிதமும், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் தலா 22 சதவிகிதமும், பக்கவாதம் 15 சதவிகிதமும் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க