பால் தாக்கரே பேரன் முதல்வர்?- பா.ஜ.க‍‍வுக்கு சிவசேனா `செக்' | will grandson of Bal Thackaray be next cm of maharashtra?

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (13/06/2019)

கடைசி தொடர்பு:17:41 (13/06/2019)

பால் தாக்கரே பேரன் முதல்வர்?- பா.ஜ.க‍‍வுக்கு சிவசேனா `செக்'

சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரே பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக முன்னிறுத்தப்படுகிறார்.

பால் தாக்கரே

மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவசேனா 18 தொகுதிகளிலும், பி.ஜே.பி 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளின. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கைகோக்கின்றன.

இந்நிலையில், ``மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜூனியர் தாக்கரே எனப்படும் ஆதித்யா தாக்கரே போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவரை அடுத்த முதல்வராக மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் ஆதித்யா தாக்கரே போட்டியிடுவாரேயானால், 53 ஆண்டுக்கால சிவசேனா வரலாற்றில், தாக்கரே குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் நபராக ஆதித்யா இருப்பார். 28 வயதாகும் ஆதித்யா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். சிவசேனாவின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் தலைவராக ஆதித்யா தாக்கரே செயல்பட்டுவருகிறார்.

தற்போது பி.ஜே.பி-யைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் அங்கு முதல்வராக உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி- சிவசேனா கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்குமானால், ஆதித்யாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள் மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க