`ஃபேக் ஐடியில் காதல்; காலம் வைத்த சஸ்பென்ஸ்'! - ஃபேஸ்புக்கால் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | husband and wife becomes lovers by facebook fake id

வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (13/06/2019)

கடைசி தொடர்பு:20:36 (13/06/2019)

`ஃபேக் ஐடியில் காதல்; காலம் வைத்த சஸ்பென்ஸ்'! - ஃபேஸ்புக்கால் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

ஃபேஸ்புக்

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவுக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆசியரியாக இளைஞர் ஒருவர் பணியாற்றிவருகிறார். இவர், ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு முன், அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் புனைப்பெயருடன் இயங்கிவந்துள்ளனர். ஆனால், ஒருவரின் புனைப்பெயர் மற்றொருவருக்குத் தெரியவில்லை. மேலும், அவர்கள் `டிபி’யில்கூட தங்கள் உண்மையான புகைப்படத்தைப் பயன்படுத்தாமல், போலி புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

விபரீதம்

ஒருவர் மற்றொருவருக்குத் தெரியாமல், ஃபேஸ்புக்கிலிருக்கும் ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகியுள்ளனர். அப்படி ரெக்வெஸ்ட் அனுப்பி இருவரும் நட்பாகி, அந்த நட்பு காதலாக உருமாறி நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முகம் பார்க்காமல், முகபுத்தகத்தில் நீடித்த காதல், ஒருகட்டத்துக்குமேல் தாக்குப்பிடிக்கவில்லை. இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, அம்ரோஹா பகுதியில் உள்ள உணவு விடுதியில் இருவரும் சந்திக்கலாம் என்று கூறி, அங்கு சென்றுள்ளனர்.

அங்கு, அவர்களுக்கு  ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. புனைபெயரில் காதலித்த இருவரும் கணவன்-மனைவிதான் என்பது காலம் அவர்களுக்காக வைத்திருந்த சஸ்பென்ஸ். பார்த்ததும் ஒருவரையொருவர் சரமாரியாக திட்டித்தீர்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து மோதல் வெடித்துள்ளது.  உணவு விடுதிக்குள் இருந்தவர்கள், அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர் ஆனாலும், இருவரும் அங்கிருந்து வெளியேறி பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.