`இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை!’ - அமித் ஷா | BJP yet to achieve its peak says amith sha

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (13/06/2019)

கடைசி தொடர்பு:07:04 (14/06/2019)

`இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை!’ - அமித் ஷா

``பெரும்பான்மை வெற்றியை பெற்றிருந்தாலும், இன்னும் வெற்றியின் உச்சத்தை நாங்கள் அடையவில்லை” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா

அமித் ஷா தலைமையில் பா.ஜ.க-வின் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சி அலுவலகத் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்கு அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், ``இந்தியா முழுவதும் 303 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையோடு நாம் வெற்றி பெற்றிருந்தாலும் வெற்றிக்கான உச்சத்தை இன்னும் அடையவில்லை. இதை நான் 2014-ம் ஆண்டு நடந்த கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் கூறியிருந்தேன்.

பா.ஜ.க தலைவர்

மீண்டும் இப்போதும் அதையே கூறுகிறேன். இன்னும் சிறந்த நிலையை அடைய வேண்டும். கட்சியை வளர்ச்சிப்பாதைக்குக்  கொண்டு செல்ல நாம் நம்மையே அர்ப்பணிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க முதலமைச்சர்கள் ஆட்சி செய்யும்போதுதான், அதன் உச்சத்தை அடையும். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பா.ஜ.க-வுக்கு தொண்டர்கள் உள்ளனர்" என அவர் தெரிவித்தார். 

மேலும் ``லோக்சபா தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றி பெற அமித் ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடர வேண்டும்” என அனைத்து மாநிலத் தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடருவார் என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து அமித் ஷாவே தலைவராக இருக்க முடிவு எடுக்கப்பட்டது.