`மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் பலி!’ - தொழிலாளர்கள் ஆணையம் | manual scavenging is continuing in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:18:00 (14/06/2019)

`மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்டோர் பலி!’ - தொழிலாளர்கள் ஆணையம்

னிதர்களே மனிதக் கழிவை அகற்றும் இழிதொழில் சில மாநிலங்களில் ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் அது நீடிக்கிறது என்று மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் கூறியுள்ளது.

இழிதொழில்

மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் மன்ஹர் வலிஜ்பாய் ஜாலா, ஆறு நாள் பயணமாக இமாசலப் பிரதேசம் சென்றுள்ளார். அங்கு துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை குறித்து தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழ்நாடு மற்றும் இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் நிலை இன்னும் நீடிப்பதாகக் கூறினார். மேலும் அவர், 1993-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

``சாக்கடை மற்றும் மலத்தை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகளை வழங்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இயந்திரமயத்துக்கு மாறிய பிறகு, அந்தத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன” என்றார். தமிழகத்தைப் பொறுத்தளவில், இயந்திரங்களைப் பயன்படுத்துவதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், அது முழுமையான உண்மையல்ல. சென்னை போன்ற சில நகரங்களில் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை போதுமானதல்ல, இன்னும் மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நிலை இன்னும் நீடிக்கிறது" என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க