காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்த நடிகை லிசா ரேவின் ஒன்பது மாத குழந்தை! | Lisa Ray's twins Soleil and Sufi dress up in mini sarees

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (14/06/2019)

கடைசி தொடர்பு:21:00 (14/06/2019)

காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்த நடிகை லிசா ரேவின் ஒன்பது மாத குழந்தை!

மாடல், பாலிவுட் நடிகை, கேன்சரில் இருந்து மீண்டு வந்தவர் எனப் பல புகழ்களுக்குச் சொந்தக்காரர் லிசா ரே. தற்போது தன் ஒன்பது மாத பெண் குழந்தைக்குப் பாரம்பர்ய காஞ்சிபுரம் பட்டு ஆடை அணிவித்து அதைப் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற புடவை அணிந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கும் லிசாவின் மகள் சோலைலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

பட்டுப்புடவை

இது குறித்து லிசா வெளியிட்டுள்ள பதிவில்,"வாடகைத்தாய் மூலம் ஒரே நேரத்தில் பிறந்த என்னுடைய இரட்டைக் குழந்தைகள்தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து வருகிறேன். ஆனால், கடந்த ஒரு வாரமாக எனக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. நான் குழந்தைகளின் அருகில் சென்றால் அவர்களுக்கும் தொற்று ஏற்படும் என்பதால் அவர்கள் அருகில்கூட செல்லாமல் இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் என்னுடைய சகோதரி என் குழந்தைக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையைப் பரிசளித்தாள். அதை என் தோழி மூலம் என் குழந்தைகளுக்கு அணிவித்து அழகு பார்த்தேன். என் தோழி தீபிகா மூலம் என் குழந்தைகளிடம் எப்போதுமான நெருக்கத்தை உணர்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.