வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (26/07/2013)

கடைசி தொடர்பு:13:55 (26/07/2013)

கார்கில் போர் 14வது ஆண்டு நினைவு நாள்: நாடு முழுவதும் அனுசரிப்பு!

புதுடெல்லி: கார்கில் போரின் 14 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு நாடு முழுவதும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய - பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே 1999 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற இந்த போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக இழந்தனர்.

இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கார்கில் போரின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முப்படை தளபதிகளும் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதே போல் சென்னை மற்றும் புதுச்சேரியிலுள்ள நினைவிடத்திலும் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சீனாவின் தொடர் அத்துமீறல் வருத்தம் அளிப்பதாக கூறினார். சீனா, இந்தியா இடையே நிலவும் எல்லைப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருவதாகவும், எல்லைப் பிரச்சனை குறித்து அந்நாட்டு அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்