ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | Sterlite Tuticorin copper plant, Supreme Court, Tamil Nadu pollution control board

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (29/07/2013)

கடைசி தொடர்பு:12:09 (29/07/2013)

ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான விஷவாயு கசிவால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இழுத்து மூடியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த அனுமதியை எதிர்த்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்நாயக், கெஹர் ஆகியோர் கொண்ட அமர்வு, ஸ்டெர்லைட் ஆலை இயங்க தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், ஆலை இயங்க பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டியுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேவைப்பட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பரிந்துரைகளை தாக்கல் செய்ய வேண்டியது இருக்கும் என்றும் பரிந்துரையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்