பாலியல் பலாத்கார வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்! | Sexual assault case: Asaram sent to 14-day judicial custo

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (02/09/2013)

கடைசி தொடர்பு:16:25 (02/09/2013)

பாலியல் பலாத்கார வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

ஜோத்பூர்: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய சாமியார் ஆசாராம் பாபுவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேய் விரட்டுவதாக கூறி தனது ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமியிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக, அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார் ஆசாராம் பாபு.

 அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.இதனையடுத்து அவருக்கு உடல் நிலை குறித்த மருத்துவ பரிசோதனை இன்று நடத்தப்பட்டது.

அதில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு பூரண உடல் ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஆசாராம் பாபு இன்று ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்