Published:Updated:

“அப்பா, என்னைக் காப்பாத்துங்க, சுத்தி நெருப்பா இருக்கு!"- தந்தைக்கு மகனின் கடைசி அழைப்பு

Tanmay Vishwakarma

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நடந்த சோகம்.

“அப்பா, என்னைக் காப்பாத்துங்க, சுத்தி நெருப்பா இருக்கு!"- தந்தைக்கு மகனின் கடைசி அழைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நடந்த சோகம்.

Published:Updated:
Tanmay Vishwakarma
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு தினங்களுக்கு முன்பு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் அந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்படி அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் 19 வயதேயான தன்மே விஸ்வகர்மா (Tanmay Vishwakarma). தன்மேவுக்கு காய்ச்சல் எற்பட்டிருந்ததால் அவரின் தந்தை அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு தன்மே விஸ்வகர்மாவை மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர். பின் அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி புகைப்படத்தை எடுத்து நான் சீக்கிரம் குணமாகி வந்துவிடுவேன் என்ற செய்தியை அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை அனுப்பிய சில நிமிடங்களில் அவரின் தந்தையான அமன் விஸ்வகர்மாவிற்கு (Aman Vishwakarma ) அழைப்பு ஒன்று வருகிறது.

New Life Multispecialty Hospital
New Life Multispecialty Hospital

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அப்பா, சுற்றிலும் நெருப்பா இருக்குது , என்னால வெளியே வர முடியல தயவுசெய்து வந்து என்னைக் காப்பாத்துங்க" என்ற குரல் அந்த அழைப்பில். அது வேறு யாரிடம் இருந்தும் இல்லை, தன்மேயிடம் இருந்து வந்த அழைப்பே அது. என் மகன் மதியம் 2.49 மணிக்கு என்னை அழைத்து உதவிக்காக அழுதான் அப்போது எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று சொல்லி வேதனை அடைந்துள்ளார் அமன் விஸ்வகர்மா.

“அப்பாவி மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற நிறுவனத்தை நடத்தும் மருத்துவமனை இயக்குநர்கள் மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனை செயல்பட அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்மேயின் தந்தை கூறியுள்ளார். ஜபல்பூர் எஸ்பி (SP) சித்தார்த் பகுகுணா (Siddharth Bahuguna) கூறுகையில், போதுமான தீயை அணைக்கும் கருவிகளும், இது போன்ற சம்பவங்கள் நடந்தால் வெளியேற எமர்ஜென்சி எக்ஸிட்டும் (emergency exit) அந்த மருத்துவமனையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த மருத்துவமனையினர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.