இந்தி நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி!

மும்பை: பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தேவதாஸ், மதுமதி, மற்றும் கங்கா ஜமுனா உள்பட 60க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் திலீப் குமார். இவர், பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த 2000 முதல் 2006 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் திலீப் குமாருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக திலீப்குமாரை மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திலீப் குமாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்று அவரை பரிசோதித்து வரும் மருத்துவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!