வீட்டுக்கடன் வட்டி அதிகரிக்கிறது! | Raghuram Rajan surprises with credit policy, raises repo rate by 0.25%

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (20/09/2013)

கடைசி தொடர்பு:17:47 (20/09/2013)

வீட்டுக்கடன் வட்டி அதிகரிக்கிறது!

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டியை (ரெபோ) 0.25 சதவீதம் அதிகரிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் இதர வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் பெறும் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்க வைக்கும் நடவடிக்கையாக வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி விகிதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, இன்று நடைபெற்ற முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கடன் வட்டி அதிகரிக்கும்

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொது மக்கள் பெறும் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்