வெளியிடப்பட்ட நேரம்: 07:51 (21/09/2013)

கடைசி தொடர்பு:11:00 (21/09/2013)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் வீடு மீது ராணுவத்தினர் தாக்குதல்!

இலங்கை: இலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் வீட்டின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆனந்தி சசிதரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவரது வீடு ராணுவத்தினரால் நள்ளிரவில் தாக்கப்பட்டது.

பயங்கர ஆயுதங்களுடன் ஆனந்தியின் வீட்டை முற்றுகையிட்டு தாக்கியதில் அங்கிருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலின்போது, ஆனந்தி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது, தேர்தல் கண்காணிப்பாளரும் வழக்கறிஞருமான சுபாஸும் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் ராணுவ உடை அணிந்து இருந்ததாக வழக்கறிஞர் சுபாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ஆனந்தி கூறுகையில், "இந்த சம்பவத்தின் போது, உதவிக்கு போலீசாரை அழைத்தும் அவர்கள் வரவில்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு தமிழ் தேசிய கூட்ட மைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால், இலங்கை தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்