எண்டோசல்ஃபான் ஆலையை மூட கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம், மே 10,2011

எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஹெச்.ஐ.எல். தொழிற்சாலையை மூடுவதற்கு கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொச்சியில் உள்ள ஹெச்.ஐ.எல். தொழிற்சாலை விதிமுறைகளை மீறி எண்டோசல்ஃபான் மருந்தை தயாரிப்பதன் காரணமாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், "உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளில் விவசாயத்துக்கு எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இதை பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நோய்கள் பரவுவதாகவும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கேரள அரசு எண்டோசல்ஃபான் பயன்படுத்த தடை விதித்தது.

அத்துடன், நாடு முழுவதும் இந்தப் பூச்சிக்கொல்லி மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது என்று தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!