போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ மூலம் மோடிக்கு குறி: பிரதமருக்கு பா.ஜ. கடிதம்

புதுடெல்லி: போலி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ மூலம் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி குறிவைக்கப்படுவதாக பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், போலி என்கவுன்டர் வழக்கில் மோடியை சேர்க்கும் நோக்கத்தில் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், போலி என்கவுன்டர் தொடர்பாக குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ( இவர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் ) எவ்வித அரசு தரப்பு சாட்சியமும் இல்லாமல் சிபிஐ கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தவறான வாக்குமூலத்தின் அடிப்படையில் அமித் ஷாவை சிபிஐ கைது செய்துள்ளதாகவும், இஸ்ரத் ஜெஹான் வழக்கில் மற்றவர்களை சேர்ப்பதற்காக சிபிஐ, சிலருடன் பேரம் நடத்தி உள்ளதாகவும் ஜெட்லி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!