வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (04/10/2013)

கடைசி தொடர்பு:13:29 (04/10/2013)

காஷ்மீரில் 'கார்கில்' போன்ற நிலைமை இல்லை: ராணுவத் தளபதி மறுப்பு!

 ஸ்ரீநகர்: காஷ்மீரின் கெரன் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியதை 'கார்கில்' ஊடுருவலுடன் ஒப்பிடக்கூடாது என்றும், 'கார்கில்' போன்ற நிலைமை காஷ்மீரில் இல்லை என்றும் இந்திய ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கெரன் பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்குள் 30 முதல் 40 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி கடந்த 11 நாட்களாக அக்கிராமத்தினை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்பகுதியை, எல்லை பாதுகாப்புப்படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கடந்த 11 நாட்களாக கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி, விரட்டியடிக்க முயற்சித்து வருகின்றனர்.இதனிடையே இன்று காலை இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனாலும் அங்கு ஓயாமல் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங், கெரன் பகுதியில் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சம்பவத்தை 1999-ம் ஆண்டு நிகழ்ந்த கார்கில் ஊடுருவலுடன் ஒப்பிடுவது சரியல்ல. ஊடுருவிய தீவிரவாதிகளை சுட்டுக்கொல்ல ராணுவத்தினர் முழு மூச்சுடன் களமிறங்கி உள்ளனர். விரைவில் இது முடிவுக்கு வரும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்