வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (25/11/2013)

கடைசி தொடர்பு:16:32 (25/11/2013)

தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் ராஜினாமா!

புதுடெல்லி: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண் பத்திரிகையாளர், அப்பத்திரிகையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தெஹல்காவில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளரை தருண் தேஜ்பால் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கோவா காவல்துறையினர் டெல்லி வந்து தெஹல்கா அலுவலகத்தில் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் போலீசில் இன்னும் புகார் அளிக்கவில்லை. கோவா காவல்துறையினர் தாமாகவே முன்வந்துதான் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், தருண் தேஜ்பால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. இதனால் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தருண் தேஜ்பால் மீது புகார் கூறிய, பெண் பத்திரிகையாளர் தான் பணியாற்றி வந்த தெஹல்கா பத்திரிகையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இனியும் தான் அங்கு வேலை செய்வது இயலாத காரியம் என்பதாலும், தருண் தேஜ்பால் மீதான புகார் விவகாரத்தில் தெஹல்கா நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கை தமக்கு அதிருப்தி அளிப்பதாலும் தாம் இந்த ராஜினாமா முடிவுக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்