ஓரினச் சேர்க்கை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

புதுடெல்லி: ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சரியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஓரினச்சேர்க்கை குற்றம் எனக் கூறும்  அரசியல் சட்டம் 377 வது பிரிவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை குறை கூறியுள்ள ராகுல், ஓரினச் சேர்க்கை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விவகாரம், அதனை அவர்களது முடிவுக்கே விட்டுவிட வேண்டும் என்பதே தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இது விஷயத்தில் ஒவ்வொருவரும் அவர்களது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!